கடந்த மாதம் ஆரம்பமாகிய மாகாண மட்ட பாடசாலை விளையாட்டு விழா நேற்று (09.10.2022) இனிதே நிறைவு பெற்றது. இதில் எமது பாடசாலை 20 வயதின் கீழ் ஆண்கள் கிரிக்கெட் போட்டயிலும் 16 வயதின் கீழ் ஆண்கள், பெண்கள், 18 வயதின் கீழ் ஆண்கள், பெண்கள் மற்றும் 20 வயதின் கீழ் பெண்கள் மேசைபந்து போட்டியிலும் பங்குபற்றி இருந்தார்கள். அத்துடன் மெய்வல்லுனர் போட்டி நிகழ்விலும் எமது பாடசாலை மாணவர்கள் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் கடந்த செப்டம்பர் மாதம் 09 திகதி மட்டக்களப்பில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மேசைபந்து போட்டியில் எமது பாடசாலை
16 வயதின் கீழ் பெண்கள் அணி, 20 வயதின் கீழ் பெண்கள் அணி, 18 வயதின் கீழ் ஆண்கள் அணி ஆகிய மூன்று அணிகளும் மாகாண மட்டத்தில் 2 ஆம் இடங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதே போன்று கடந்த வாரம் (ஒக்டோபர் மாதம்) 05 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதி வரை கந்தளாய் லீலாரத்ண மைதானத்தில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையேயான விளையாட்டு நிகழ்வின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் போட்டிகள் இடம்பெற்றன. இதில் எமது பாடசாலை மாணவர்கள் பங்குபற்றி இருந்தார்கள். இதில் அருட்செல்வன் பிரதிஷா 20 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் தான் பங்கு கொண்ட மூன்று போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளார். 800m போட்டியில் முதலாம் இடத்தினையும், 1500m போட்டியில் முதலாம் இடத்தினையும் 400m சட்டவேலி தாண்டுதல் நிகழ்வில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார். அத்துடன் 16 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் பங்குபற்றிய தருமரஞ்சன் தனுஷன் 400m போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்.
இடம்பெற்ற மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் திருமலை வலயம் 59 புள்ளிகளை பெற்றிருந்தது. இதில் 16 புள்ளிகள் எமது பாடசாலை மாணவர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது...



