சல்லி அம்பாள் மகா வித்தியாலயத்தின் வரலாறு
வரலாற்றுப் புகழ்; மிக்க பிரதேசங்களின் வரலாறுகள் மக்கள் வாழ்வில் என்றும் நினைவில் நிறுத்தப்பட வேண்டியவை அந்த வகையில் எமது பாடசாலையின் வரலாற்றினை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். எதிர்கால சந்ததியினரும் இதனை எண்ணிப் பார்க்கும் அளவிற்கு நிலை நிறுத்தப்படல் வேண்டும்.
ஜந்து மைல்கல் திருகோணமலை நகரின் வடக்கே சல்லிக் கிராமம் அமைந்துள்ளது. வடகிழக்கு திசை கடலாலும், தெற்குத்திசை கடல்நீர் ஏரியாலும், மேற்குத்திசை தரையாலும் சூழப்பட்டு சிறு மலை, குளம் என்பவற்றை தன்னகத்தே கொண்ட இயற்கை எழில் மிகு கிராமமே எம் கிராமம். வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு சல்லி ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானம் அமையப்பெற்றமை சிறப்பு அம்சமாகும். இக் கிராம மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு ஆலயமும், அறிவு வளர்ச்சிக்கு இவ் வித்தியாலயமும் இரு கண்களாக விளங்குகிறது. அன்னையின் அரும்பெருங் கருணையால் இக்கிராமமே சீருஞ்சிறப்பும் பெறுகிறது. கரையோரமாக அமைந்துள்ள இக்கிராமத்தில் மீன் பிடித்தொழிலை சீவனோபாயமாக கொண்ட மக்களெ செறிவாக வாழ்கின்றார்கள் இவர்களை விட விவசாயம், அரசதுறை, தனியார்துறை போன்ற பல்வேறு துறைகளிலும் தொழில் புரிகின்றனர்.
இக்கிராம வளர்ச்சிக்கு செழுமை தருவது இங்கு அமைந்துள்ள பாடசாலை ஆகும். இப்பாடசாலையின் வரலாற்றினை நோக்குமிடத்து 1949ம் ஆண்டு 7ம் மாதம் 1ம் திகதி சல்லி அரசினர் பாடசாலை எனும் பெயரில் ஆரம்பமானது. இப்பாடசாலை ஆரம்பத்தில் வடிவேல் முத்து எனும் பெயருள்ள தனியாரிற்கு சொந்தமான ஒரு காணியில் மண்சுவரினாலும், ஓலையாலும் கட்டப்பட்ட கட்டிடத்தில் சில மாணவர்களுடன் ஆரம்பமானது அவ்வேளை அதிபராக திரு.சபாபதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் கடமை ஆற்றினார்.
அதன் பின்னர் மாணவர் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப கட்டிடங்களும் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால் அதற்கான நிலம் தேவைப்பட்டது. அவ்வேளையில் இக்கிராமத்தைச் சேர்ந்த அமரர் கார்த்திகேசு இரத்திரனசபாபதிப்பிள்ளை அவர்கள் பிரதி உபகாரம் பாராது எதிர்கால அறிவார்ந்த சமூகத்தின் அவசியத்தை உணர்ந்து தமக்கு சொந்தமான நிலமாகிய தற்போது வித்தியாலயம் அமைந்திருக்கும் காணியினை வழங்கி கிராமத்தின் கல்வி அபிவிருத்திக்கு வித்திட்டார். இப்பெருந்தகையே தற்பொழுது பாடசாலையின் ஸ்தாபக தந்தையாக போற்றப்படுகின்றார். இவரது வழிவந்தவர்களும் பாடசாலையுடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தி பாடசாலையின் அபிவிருத்தியில் தங்களது பங்களிப்பினை நல்கி வருகிறார்கள். அந்த வகையில் ஸ்தாபகரின் நினைவகம் அவரது பேரனான கிருஸ்ணராசா ராஐசூரியன் அவர்களால் எமது பாடசாலையின் முகப்பில் அமைக்கப்பட்டு 24.06.2015 அன்று பாடசாலை அதிபரால் திறந்துவைக்கப்பட்டது.
மண்சுவரினாலும், ஓலையாலும் கட்டப்பட்ட கட்டிடத்தில் சில மாணவர்களுடன் ஆரம்பமான இப்பாடசாலை “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்னும் உயரந்த சிந்தனையை இலக்காகக் கொண்ட ஸ்தாபகரின் எண்ணக்கருவை நிலை நிறுத்திய வளர்ச்சிக் கட்டங்களோ பல. முதல் அதிபராக திரு.சபாபதிப்பிள்ளை அவர்களும் தொடர்ந்து திரு.சௌந்தரராஐன், திரு.சின்னத்துரை ஆகியோரும் அதிபர்களாக கடமையாற்றியதாக மூத்தோர்களின் கருத்துக்களின் மூலம் அறியப்படுகிறது. இவர்கள் மூவரதும் சேவைக்காலம் 01.07.1949 தொடக்கம் 10.01.1959 வரையாகும். தனித்தனியாக இவர்களது சேவைக்காலங்களை அறியமுடியாதுள்ளது.
1959ம் ஆண்டு தற்போது பாடசாலை அமைந்துள்ள காணியில் அரச உதவியுடன் பாடசாலை அமைக்கப்பட்டு இயங்கிவருகிறது. இதன்படி சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் உள்ளவாறு 16 அதிபர்களும், 2பதில் அதிபர்களும் 1959ம் ஆண்டிலிருந்து சேவையாற்றி உள்ளதாக அறிய முடிகிறது. அவர்களின் சேவைக்கால விபரம் பின்வருமாறு
11.01.1959 - 20.12.1970 வரை திருமதி.ப.பிள்ளைநார்
21.01.1971 - 29.03.1972 வரை திருளு.இரத்தினவேலு
30.03.1972 - 15.03.1974 வரை திரு.செ.சின்னரெத்தினம்
16.03.1974 - 21.02.1975 வரை திரு.வீ.அருளம்பலம்
22.02.1975 - 31.01.1979 வரை திரு.மா.பாலசுந்தரம்
01.02.1979 - 08.02.1979 வரை திரு.சி.வைகுந்தசாமி
09.02.1979 - 29.02.1980 வரை திரு.பி.சுப்பிரமணியம்
01.03.1980 - 09.03.1980 வரை திரு.சி.ஜோசப்
10.03.1980 - 08.02.1980 வரை திரு.க.சி.நடராஐh
09.02.1986 - 19.08.1989 வரை திரு.வே.இராசதுரை
20.08.1989 - 31.05.1995 வரை திரு.பி.சுப்பிரமணியம்
01.01.1995 - 08.12.1997 வரை திரு.க.சந்தியாப்பிள்ளை
19.01.1997 - 24.09.1999 வரை திரு.க.தருமரெட்ணமுதலி
25.09.1999 - 04.09.2008 வரை திரு.வே.ஸ்ரீகந்தராசா
05.09.2008 - 29.08.2010 வரை திரு.நா.வசிகரன் (பதில் அதிபர்)
30.08.2010 - 03.02.2012 வரை திரு.இ.கருணாகரன்
04.02.2012 - 13.11.2013 வரை திருமதி.த.ரமணன் (பதில் அதிபர்)
14.11.2012 - இன்று வரை திரு.ந.பரமேஸ்வரன் அதிபராகவும் கடமையாற்றி வருகிறார்.
இத்தனை அதிபர்களின் சேவையாலும் அத்தனை ஆசிரியர்களின் அயராத முயற்சியாலும் இன்று உயர்வு பெற்றது இவ்வித்தியாலயம். பல்வேறு கால கட்டங்களிலும் பல தடைகளையும் தாண்டி சாதனைகள் பலவற்றைப் படைத்த அதிபர்களும் ஆசிரியர்களும் நம்மைவிட்டுப் பிரிந்துள்ளார்கள். இவ்வுலகை நீர்த்தும் உள்ளார்கள். அனைவரையும் இந்நேரத்தில் நினைவு கூறும் அதே நேரத்தில் இவ்வுலகை விட்டுப் பிரிந்த உள்ளங்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியதுடன் அவர்களது ஆசிகள் எமது வித்தியாலயத்திற்கு என்றும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை மண்றாடுகின்றோம்.
இக்காலத்தில் திரு.எஸ்.சின்னத்தம்பி என்பவர் அதிபராக கடமையாற்றினார். ஆரம்பகாலத்தில் 1-5 வரையுள்ள ஆரம்பப்பிரிவு பாடசாலையாக இருந்தது, 1989ம் ஆண்டு தரம்-6 வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு, 1992ம் ஆண்டு தரம்-9 வரையுள்ள வகை-3(வலிந-3) பாடசாலையாக தரம் உயர்ந்தது. 1989ம் ஆண்டு தொடக்கம் 1995ம் ஆண்டு வரை திரு.P.சுப்பிரமணியம் எனும் அதிபர் கடமையாற்றிய காலமாகும். இக்காலப்பகுதி இப்பாடசாலையின் வளர்ச்சியில் ஒரு பொற்காலம் எனலாம். தொடர்ந்து 1995ம் ஆண்டு இவ் அதிபரின் அயராத அர்ப்பணிப்பான முயற்சியினால் வகை ஐஐ(வலிந 2) எனும் தரம்-11 வரையுள்ள நிலைக்கு தரம் உயர்ந்தது. இவ்வேளையில் கடமையாற்றிய ஆசிரியர்களினது அர்ப்பணிப்பான செயற்பாடுகளும் திரு.க.சுப்பிரமணியம் அதிபர் அவர்களின் பெரு முயற்சிக்கு பக்கபலமாக அமைந்தது. 1998 – 1999 காலப்பகுதியில் திரு.க.தருமரெட்ணமுதலி அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். இவரது காலப்பகுதி 1999இல் க.பொ.த(சாஃத) பரீட்சையில் 70மூ மாணவர்களும் இலகு கணிதத்தில் 100மூ மாணவர்களும் சித்தி பெற்றமையும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதல்முறையாக ஒரு மாணவி சித்தி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து 25.09.1999 - 04.09.2009 வரையுள்ள காலப்பகுதியில் திரு.வே.சிறீகந்தராஐh(அமரர்) அவர்கள் அதிபராக கடமையாற்றினார். இவர் காலத்திலேயே இவ்வித்தியாலயம் 01.06.2002 ம் ஆண்டு மகா வித்தியாலயம் எனும் 1ஊ பாடசாலையாக தரம் உயர்ந்தது. அமரர் திரு.வே.சிறீகந்தராஐh அவர்கள் பணியாற்றிய காலப்பகுதியும் இவ்வித்தியாலயம் பௌதீக வளங்களாலும், ஆசிரிய வளங்களாலும் உயர்நிலை அடைந்த சிறப்பான எழுச்சிக் காலம் எனலாம். இப்பாடசாலையில் இவர் காலம் வரை பதினைந்து அதிபர்கள் கடமையாற்றியுள்ளனர்.
எமது வித்தியாலயத்தின் கல்வி அபிவிருத்தியின் அடைவு மட்டத்தை எடுத்து நோக்கும்பொழுது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வித்தியாலய வரலாற்றில் முதல் மாணவியாக செல்வி.காந்திதாஸ் லக்ஸிகா 1999இல் 125 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றார், 2006இல் உதயகுமார் நிரோஐன் 136புள்ளியையும், ரவீந்திரராசா விதுசனா 136 புள்ளியையும் பெற்று சித்திபெற்றனர். தொடர்ந்து 2009இல் ஆனந்தமுருகன் ஆனந்-142 புள்ளியையும் அமிர்தலிங்கம் நிரோஐன் 138 புள்ளியையும், 2011இல் செல்வி நவசோதிராசா சதுர்;ஷிகா 153 புள்ளியையும், 2012 இல் செல்வி முருகதாஸ் விதுசனா 164 புள்ளியையும், 2013இல் செல்வன் சுதாகரன் நபின்சன் 175 புள்ளியையும்(மாவட்ட நிலை-48), 2014இல் செல்வி லெட்சுமிகாந்தன் கிசோபிகா-160 புள்ளியையும், செல்வி விக்னேஸ்வரன் ருசிதா-171 புள்ளியையும், செல்வி மணிவன்ணன் டிசா-153 புள்ளியையும் பெற்று சித்திநிலை பெற்றுள்ளனர். இவ்வாண்டு சித்திபெற்ற மூன்று மாணவிகளும் எமது வித்தியாலயத்தில் ஒரு வரலாற்று சாதனையை புரிந்துள்ளனர்.
க.பொ.த(சா.த) பெறுபேற்றில் 2013இல் தோற்றிய ஆனந்தமுருகன் அர்ச்சனா 8AB சித்தியையும், க.பொ.த(உ.த)பெறுபேற்றில் செல்வி சின்னராசா ஆனந்தி மாவட்ட மட்டத்தில் 7ம் நிலையைப் பெற்று பல்கலைக்கழக அனுமதியைப்பெற்று தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்றுவருகிறார். இவை எமது வித்தியாலயத்தின் வரலாற்றுச் சாதனைகள் ஆகும்.
கல்வியில் மட்டுமன்றி இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் எமது பாடசாலை தேசியமட்டம் வரை சென்று வருவது குறிப்பிடத்தக்கது. விவசாயப் போட்டிகள், புத்தாக்கப் போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகளிலும் பங்குபற்றி சாதனைகள் படைத்துள்ளார்கள். கல்வியில் மட்டுமன்றி எம்மைச் சார்ந்த அனைத்து மாணவர்களும்;, சமூகம் போற்றும் உயாந்த விழுமியப் பண்புகளைப் பிரதிபலிக்கும் ஒழுக்க சீலர்களாக உருவாக்கி எதிர்கால்த்தில் நல்லதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணிதனை முன்னெடுப்போம் என்று கூறி விடைபெறுகின்றேன்.