ஆசிரியர்களின் ஒழுங்கு விதிகள்
தினமும் காலை 7.10 மணிக்கு முன் பாடசாலைக்கு சமுகமளித்தல்.
நேர அட்டவணைக்கு ஏற்ப பாடங்களை திட்டமிட்டு வினைத்திறனுடன் கற்பித்தல்.
மாணவர்களிடம் பாகுபாடின்றி சமத்துவம் பேணல்.
பிள்ளைகளின் திறமைகளுக்கு ஏற்ப அவர்களுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல்.
ஒரே பிள்ளையுடன் அதிக நேரம் உரையாடுவதைத் தவிர்த்தல்.
வகுப்பறை நேரங்களில் கையடக்கத் தொலைபேசியில் உரையாடுவதைத் தவிர்த்தல்.
பிள்ளைகளுக்கு கடின வேலைகள் கொடுத்தலை கூடியளவு தவிர்த்தல்.
தீய வார்த்தைகளில் பிள்ளைகளைத் திட்டுதல் கூடாதுபிள்ளைகளுக்கு ஒழுக்க நெறிகளைப் புகட்டுதல்.
பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக நடத்தல்.
பிள்ளைகளை துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாத்தல்.
சிறுவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுத்தல்.
திட்டமிட்ட வகையில் கடமைகளை உரிய காலத்தில் நிறைவு செய்தல்.
வகுப்பறை ஆசிரியர்கள் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னர் வகுப்பறைகளுக்குச் சென்று கற்றல், கற்பித்தலுக்கு மாணவர்களைத் தயார் செய்தல்.
பாடங்களுக்கான மணி ஒலித்ததும் தாமதமின்றி வகுப்பிற்கு செல்லுதல்.
பாடசாலையின் அனைத்து செயற்பாடுகளிலும் சகல ஆசிரியர்களும் தவறாது பங்குபற்றுதல் வேண்டும்.
காலை ஒன்றுகூடல் மற்றும் ஏனைய வைபவங்களின் போது ஒழுங்கினைப் பேணல்.
மாணவர்களின் ஒழுங்கு விதிகள்
பாடசாலைக்குத் தினமும் 7.10 மணிக்கு முன்னர் மாணவர்கள் சமுகமளித்தல் வேண்டும்.
காலை ஒன்றுகூடல் நிகழ்விற்கு முன்னர் வகுப்பறைச்சுத்தம், வெளிச்சுத்த வேலைகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். காலை ஒன்றுகூடல் உடற்பயிற்சியில் சகல மாணவர்களும் கட்டாயம் பங்குபற்ற வேண்டும்.
பாடசாலையில் முதலாவது மணி ஒலித்ததிலிருந்து காலைப்பிரார்த்தனை ஆரம்பமாகும் வரை கண்டிப்பாக அமைதியைப் பேணுதல் வேண்டும். அதேபோல் கடைசி பாடத்தின் முடிவு மணி ஒலித்ததிலிருந்து பாடசாலை விட்டு வெளியேறும் வரை அமைதியைப் பேணுதல் வேண்டும்.
மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க இயலாமை ஏற்படின் அதற்குரிய காரணத்தை குறிப்பிட்டு அதிபரிடம் முன்னராகவே அனுமதி பெறவேண்டும். எதிர்பாராத காரணத்தினால் மாணவர்கள் பாடசாலைக்கு வரமுடியாமை நேரிடுமாயின் அதுபற்றி இயன்றளவு விரைவுடன் அதிபருக்கு அறிவித்தல் வேண்டும்.
மாணவர்கள் திரும்பி வருகை தரும் நாளில் விடுமுறைப் பதிவுக் கொப்பியினை பூர்த்திசெய்து கொண்டுவந்து பொறுப்பாசிரியரிடம் காட்டி ஒப்பம் பெற வேண்டும்.
மாணவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் பாடசாலைக்கு சமுகமளிக்காவிடின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வருகை தரவேண்டும்.
பாடசாலை நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் எவரும் எக்காரணத்திற்காகவும் பாடசாலையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பாடசாலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது அதிபர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி எவரும் வகுப்பறையை விட்டு வெளியே நடமாடக்கூடாது.
விஞ்ஞான அறை, நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் ஏனைய செயற்பாடுகள் போன்றவற்றிற்கு செல்லும்போதும் திரும்பிவரும் போதும் நேர்த்தியான ஒழுங்கைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
தேநீர் இடைவேளையின் போதும் வகுப்பு நேரங்களின் போதும் மாணவர்கள், சிற்றுண்டிச்சாலை, வகுப்பறைகள், பாடசாலை வளவு முதலியவற்றை அசுத்தப்படுத்தாத வகையில் ஒழுங்குடன் நடந்து கொள்ளுதல் வேண்டும்.
பாடசாலையின் அனைத்து செயற்பாடுகளுக்கும் மாணவர்கள் சீருடையிலேயே சமுகமளிக்க வேண்டும்.
பாடசாலை நேரங்களில் மாணவர்களைப் பார்ப்பதற்கு வெளியிலிருந்து எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பாடசாலை வளவினுள் எவ்வேளையாயினும் மாணவர்கள் மிதிவண்டியில் செல்லுதல் தவிர்க்கப்பட்டுள்ளது.
பாடசாலைக் கட்டிடங்களையும் தளபாடங்களையும் ஏனைய பொருட்களையும் தம் சொந்தப்பொருட்களைப் போல் மாணவர்கள் பேணிப்பாதுகாக்க வேண்டும்.
பாடசலையில் நடைபெறும் சகல பரீட்சைகளுக்கும் மாணவர்கள் சமுகமளிக்கவேண்டியது மிகக் கட்டாயமானதாகும். பரீட்சைகளுக்கு சமுகமளிக்காவிட்டால் பாடசாலையிலிருந்து அம்மாணவர்களை விலக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
பாடசாலையில் நடைபெறும் விசேட வகுப்புக்கள், இணைப்பாடவிதான முயற்சிகள் என்பவற்றிற்கு மாணவர்கள் சமுகமளிக்கவேண்டியது கட்டாயமானதாகும்.
மாணவர்கள் தமது சீருடை, காலணி, சின்னம், கழுத்துப்பட்டி என்பவற்றை அறிவுறுத்தல்களின் பிரகாரம் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் அணிந்து வரவேண்டும்.
மாணவர்கள், பாடசாலைக் கொடி, பாடசாலைக்கீதம் என்பவற்றிற்கு மதிப்பளித்தல் வேண்டும்.
ஆண்கள் தலைமுடி, கட்டையாக வெட்டப்பட்டு ஒரு பக்கம் வாரி விடப்பட்டிருத்தல் வேண்டும்.
பாடப்புத்தகங்கள், பயிற்சிக் கொப்பிகளுக்குரிய உறைகள் இடப்பட்டு பேணப்பட வேண்டும்.
மாணவர்களால் பெறப்பட்ட இலவசப்பாடநூல்கள் மூன்றாம் தவணை இறுதியில் மீள ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.
தவணைப் பரீட்சைகளின் பின்னர் வழங்கப்படும் தேர்ச்சி அறிக்கைகளை பெற்றோர் அல்லது பாதுகாவலர் பார்வையிட்டு கையொப்பமிட்டு உடனடியாகத் திருப்பி ஒப்படைத்தல் வேண்டும்.
மாணவர்கள் தமது சொந்த தேவைக்காக கடிதங்கள், சான்றிதழ்கள் என்பவற்றை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் அலுவலகத்திற்கு சமுகமளிக்கலாம்.
பெற்றோர்கள் பாடசாலைக்கு வரும் போது, பெண்கள் சேலை மற்றும் பொருத்தமான ஆடையும் ஆண்கள் பொருத்தமான ஆடையும் அணிந்து வரவேண்டும்.
பாடசாலை வளாகத்தினுள் சென்று முதலில் அதிபர் காரியாலயத்தில் அனுமதி பெற்ற பின்னரே ஆசிரியர்களை சந்திக்க வேண்டும்.