தேசிய மட்ட சதுரங்க தனிநபர் போட்டிகள் நாத்தாண்டியவில் 5,6,7 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது. இதில் சல்லி அம்பாள் மகா வித்தியாலயம் மாணவர்கள் இருவர் பங்குபற்றி இருந்தார்கள். 11 வயதின்கீழ் ஆண்கள் பிரிவில் ஜெ. தர்மிதனும், 20 வயதின்கீழ் பெண்கள் பிரிவில் அ. பிரதிஷா அவர்களும் பங்குபற்றி இருந்தார்கள்.
மொத்தம் 7 சுற்றுகள் இடம் பெற்ற போட்டிகளில் 11 வயதின்கீழ் ஆண்கள் பிரிவில் பங்கு பற்றிய ஜெ. தர்மிதன் அவர்கள் 7 போட்டிகளில் 2 இல் வெற்றி பெற்று தேசிய மட்டத்தில் 236 பேர் பங்கு பற்றி இருந்தனர் அதில் 185 நிலையை பெற்றுள்ளார். 20 வயதின்கீழ் பெண்கள் பிரிவில் பங்கு பற்றிய அ. பிரதிஷா அவர்கள் 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிபெற்று தேசிய மட்டத்தில் 78 பேர் பங்கு பற்றி இருந்தனர் அதில் 38 ஆம் நிலையை பெற்றுள்ளார்.